நடிகர் ஆர்.ஜே பாலாஜியின் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரை உலகில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர் காமெடியனாக சில படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு இயக்குனர், நடிகர் என தனக்குள் இருக்கும் திறமையை விரிவுபடுத்தி வந்த ஆர் ஜே பாலாஜி LKG, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

தற்போது சிறந்த இயக்குனர் மற்றும் ஹீரோவாக வலம் வரும் இவர் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஐசாரி கணேஷ் தயாரிக்க உள்ள இப்படத்தின் டைட்டில் போஸ்டரைற் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கு சிங்கப்பூர் சலூன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் கௌரவ வேடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.