
Riythvika Caste Controversy : ஜாதி பற்றிய விமர்சனங்களால் பிக் பாஸ் பிரபலமான ரித்விகா கோபமான ட்வீட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருந்த மெட்ராஸ் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ரித்விகா.
இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த கபாலி படத்திலும் நடித்திருந்தார்.
அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில் தற்போது ஜாதி பற்றிய விமர்சனங்களால் ரித்விகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோபமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா என பதிலளித்துள்ளார்.
ரித்விகாவின் இந்த ட்வீட் சமூக வளையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா..
— Riythvika✨ (@Riythvika) November 29, 2018