ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய ரியா விஸ்வநாதன் வேறு ஒரு சேனலில் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் ரியா விஸ்வநாதன்.

நாளுக்கு நாள் ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் திடீரென ரியா விஸ்வநாதன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

ரியாவுக்கு பதிலாக தற்போது ஆஷா கௌடா நாயகியாக நடிக்க தொடங்கியுள்ள நிலையில் தன்னிடம் எதுவும் சொல்லாமல் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தன்னை வெளியேற்றி விட்டதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரியப்படுத்தி இருந்தார் ரியா.

இப்படியான நிலையில் ரியா விஸ்வநாதன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த சீரியலுக்கு சண்டைக்கோழி என டைட்டில் வைத்திருப்பதாகவும் இரட்டை ரோஜா சீரியலுக்கு பதில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

வெகுவிரைவில் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.