‘காந்தாரா’ பட இயக்குநருக்கு தேசிய விருது: அட்லீ பாராட்டு..

Web Ads

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். வசூலிலும் இப்படம் 500 கோடியை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். பழங்குடிகள் – மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்து வருகிறது.

இச்சூழலில் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை பாராட்டி பேசிய இயக்குநர் அட்லி, ‘காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான அன்று நான் ஆம்ஸ்டர்டமில் இருந்தேன். அப்போது 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து தியேட்டரில் அந்த படம் பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்தேன்.

ஒரு இயக்குனராக இந்த மாதிரியான படத்தை உருவாக்குவது மிக கடினம். ஆனால், ஒரு நடிகராகவும் ஹீரோவாகவும் அந்த ரிதத்தை அவர் கொண்டு வந்துள்ளார். இந்த படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

rishabh shetty should get a national award director atlee
rishabh shetty should get a national award director atlee