Release Date of Nee Sudathan Vanthiya

டிக் டாக் இலக்கியாவின் சுட தான் வந்தியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Release Date of Nee Sudathan Vanthiya : டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘நீ சுடத்தான் வந்தியா’.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார். ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. இப்படத்தில் கவர்ச்சி நடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.

கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம் எப்படி என்பதைப் பற்றி புதுமுக நடிகர் அருண்குமார் பேசும்போது,

” சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும். ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் ‘நீ சுடத்தான் வந்தியா’ படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்.

26-ந்தேதி இந்தியா-தென்ஆப்பிரிக்கா மேட்ச், திட்டமிட்டபடி நடைபெறுமா?

எனக்கு சினிமா மீது காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன்.

இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். அப்போதுதான் மாஸ்டரிடம் பெற்ற நடிப்புப் பயிற்சி எனக்கு பெரிய உதவியாக இருந்ததை உணர்ந்தேன்.

இதே College-ல சீட் கேட்டு வந்தேன் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க – Actress Meenakshi Govindharajan

இந்த படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் தோன்றும் 3 பாடல்கள் இருக்கின்றன. இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ்பெற்றவர். அவருக்கும் இது முதல் படம்; எனக்கும் இது முதல் படம் ‘.

இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்புத்துறைப் பற்றி தெரிந்து கொண்டேன். எவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு படம் உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லலாம் .முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினார்கள். இதில் ரெட் ட்ராகன், ஆரி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பெரிய படங்களுக்கான படப்பிடிப்பு யூனிட் பயன்படுத்தப்பட்டது. இந்தப் படம் நடிப்பில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது போலவே ரசிகர்களுக்கும் திருப்தி தரும் என்று நம்புகிறேன்”

இம்மாதம் டிசம்பர் 31ம் தேதி இப்படம் திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ரசிகர்களுக்கு விருந்தாக நிச்சயம் இத்திரைப்படம் இருக்கும் நம்பிக்கையுடன் கூறினார் படத்தின் நாயகன் அருண்குமார். பல்வேறு தடைகளைக் கடந்து இப்படம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது.