தமிழகத்தில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் நல்ல மழை பெய்து வருவதால் ஊட்டி போல குளுகுளுவென மாறியுள்ளது.

இந்நிலையில் தற்போது கேரளாவை போல தமிழகத்திற்கு வரும் அக்டோபர் 7-ம் தேதி உச்சகட்ட கனமழை பெய்யும் என ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 25.5 செ.மீ மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் அக்டோபர் 4,5,6-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. இந்த தினங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.