
ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி டைவர்ஸ் கேஸில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மலர்ந்திருக்கும் இந்த புதிய 2025-ம் ஆண்டில் நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை “ரவி மோகன்” என மாற்றியுள்ளார் என்பது தெரிந்ததே.
மேலும், தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றி, அதன் மூலம் பலருக்கு உதவி செய்ய உள்ளதாகவும், இந்த ஆண்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதையும் தனது அறிக்கையின் மூலம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு இவர் தொடர்ந்த வழக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த விவாகரத்து வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், ரவி – ஆர்த்தி இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி, ஏற்கனவே இவர்கள் இருவரும் சமரச தீர்வுக்காக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அது தோல்வியில் முடிந்தது. கடந்த மாதம் நடந்த விசாரணையில், மத்தியஸ்தர் தரப்பில் இருந்து இன்னும் இருவருக்கும் இடையேயான சமரச பேச்சுவார்த்தை நடந்து முடியவில்லை என கூறப்பட்டது. இச்சூழலில், இவர்களின் விவாகரத்து விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் காணொளி மூலம் ஆஜராகினர். இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர் இன்று அழைத்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி சமரச பேச்சு வார்த்தையை நிறைவு செய்த பின்னர், வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று கூறி ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து வழக்கை, பிப்ரவரி 15-ம் தேதிக்கு தள்ளி வைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்னும் ஒருமாத காலத்தில் இவர்களிடையே ஏதேனும் மனமாற்றம் நிகழாதா? சமரச தீர்வு மகிழ்வாக அமையாதா? என்றொரு எண்ணம்தான், வழக்கு பிப்ரவரி 15-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
