
57 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்திக் ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார்.

இந்த படத்தைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக 57 வயது நடிகரான விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை 2018 படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
