கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ராஷ்மிகா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
Rashmika Mandanna Reduced Her Salary : இந்தியாவில் பரவி வரும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் ஒட்டுமொத்த துறைகளும் முடங்கிப் போயுள்ளது.
சினிமாத்துறையும் வரலாறு காணாத அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. திரையுலகைச் சார்ந்த தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக பல நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்து உள்ளனர். தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால் ஆகியோர் தங்களின் சம்பளங்களை குறைத்துக் கொண்ட நிலையில் ராஷ்மிகா மந்தனா அதே முடிவை எடுத்துள்ளார்.
ஆம் இவர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக குஷ்பு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக பேசப்பட்ட சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து கொள்ள அவர் முன்வைத்துள்ளார்.
போராட்டங்கள் தான் தளர்த்தப்பட்டு சினிமா பழைய நிலைமைக்கு வந்த பிறகு மீண்டும் தன்னுடைய சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம் என அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.