Vijay
தளபதி விஜய் நண்பனா? கணவரா? காதலனா? என ஓபனாக பதிலளித்துள்ளார் பிரபல நடிகையான ராஷ்மிகா.

Rashmika Mandanna About Vijay : தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தளபதி விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் இறுதியில் மாளவிகா மோகனன் நாயகியாக கமிட்டானார்.

இந்நிலையில் ராஷ்மிகா நிதினுடன் நடித்துள்ள பீஷ்பா படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் நீங்கள் நண்பன், கணவர், காதலராக எந்த நடிகர்களை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நண்பனாக நிதினையும் காதலனாக தளபதி விஜயையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் கணவரின் தேர்வுக்கு பதில் கூறவில்லை.

மேலும் தான் ஒரு தமிழ் நடிகரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவே கூறியுள்ளார்.