Ramya Pandian Brother Request to Aari Army

நீங்க ஆரியை தூக்கி வைத்துக் கொண்டாடுங்க ஆனால் மற்ற போட்டியாளர்களை கொச்சையாக விமர்சனம் செய்யாதீர்கள் என ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

Ramya Pandian Brother Request to Aari Army : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

மற்ற போட்டியாளர்களை காட்டிலும் நடிகர் ஆரிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது எனக் கூறலாம். சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் ஆரிக்கு ஆதரவு குவிந்து கொண்டே வருகிறது.

அதைப்போல் அவருடைய ரசிகர்கள் அவரிடம் சண்டையிடும் போட்டியாளர்களை வெளியே அனுப்புவதில் குறியாக இருந்து அதற்கேற்றார்போல ஓட்டளித்து வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த இரு வாரங்களாக ரம்யா பாண்டியன் நடிகர் ஆரி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் ஆரி ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் கொச்சையாகவும் திட்டி தீர்க்கின்றனர்.

இதனைப் பார்த்த ரம்யா பாண்டியனின் சகோதரர் பரசு பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்று மூலமாக ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதாவது ஆரியின் ரசிகர்கள் அவரை கொண்டாடுங்க அதில் தவறில்லை. எனக்கும் அவருடைய சமூக சேவைகள் மீது மதிப்பு உள்ளது.

ஆனால் அதற்காக மற்ற போட்டியாளர்களை கொச்சையாக விமர்சிக்காதீர்கள். இது ஒரு கேம் ஷோ. இதனை கேம் ஷோவாகவே பாருங்கள்.

இந்தப்போட்டியில் தகுதியான ஒருவர் வெல்லப் போகிறார். மற்ற போட்டியாளர்களை கொச்சையாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இதுவரை ரம்யா பாண்டியனுக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.