Ramarajan Direct Vijay Sethupathi
Ramarajan Direct Vijay Sethupathi

பிரபல நடிகர் விஜய்சேதுபதியை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Ramarajan Direct Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90களில் கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்களுக்கு இணையான நடிகராக வலம் வந்தவர் ராமராஜன்.

துணை இயக்குனராக பணிபுரிந்து நடிகரான இவர் தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகராக வலம் வந்தார். இவரின் கால்சீட் வாங்குவதற்காக சைக்கிளில் வந்து பணக்காரனான தயாரிப்பாளர்கள் பலர் உண்டு.

கொரானாவால் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் மகன்.. வருத்தத்தில் விஜய் – பிரபல நடிகர் சொன்ன ஷாக்கிங் தகவல்.

ஆனால் ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளால் சினிமாவை விட்டு வெளியேறிய ராமராஜன் அதன் பின்னர் அரசியலில் அதிமுக அணியில் இணைந்தார்.

பின்னர் அரசியலில் இருந்து விலகி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில் ராமராஜன் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை அவர் இயக்க மட்டும் தான் உள்ளார் இதில் நடிப்பதாக இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை இருப்பினும் ராமராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Ramarajan Direct Vijay Sethupathi
Ramarajan Direct Vijay Sethupathi