நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்டு இருக்கும் ரீசண்டா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத்சிங். தெலுங்கு திரை உலகை சார்ந்த இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தற்போது பாலிவுட் திரை உலகிலும் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் பிங்க் கலர் புடவையில் அவர் ரீசன்டாக எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.