நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்டு இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத்சிங். தெலுங்கு திரை உலகை சார்ந்த இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தற்போது பாலிவுட் திரை உலகிலும் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் எடுக்கப்படும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருவார். அந்த வகையில் தற்போது சிம்பிள் ஆன லூக்கில் கையில் தேசிய கொடியுடன் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.