ட்ரிப்புக்கு சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் கடற்கரையில் சோலோவாக காற்று வாங்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “லால் சலாம்” திரைப்படத்திலும் தனக்கான படப்பிடிப்பு நடித்து முடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் இருந்து இலங்கை வழியாக மாலத்தீவுக்கு ட்ரிப் சென்றுள்ளார். இதுகுறித்து அவரது புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது மாலத்தீவு கடற்கரையில் கேசுவலான உடையில் தனியாக நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.