Rajinikanth Plan About Corona Virus Treatment
Rajinikanth Plan About Corona Virus Treatment

கொரானா சிகிச்சைக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்யவுள்ள உதவி குறித்து தெரிய வந்துள்ளது.

Rajinikanth Plan About Corona Virus Treatment : கொரானா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

நமது மாநில முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கொரானா வைரஸ் சிகிச்சைக்காக தங்களிடம் காலியாக உள்ள வீடுகளை தற்காலிகமாக தருமாறு வேண்டுகோள் வைத்திருந்தனர்.

ஒரே வார்த்தையில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய ரஜினி – அவர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு.!

இதனையடுத்து நடிகர் பார்த்திபன், கமல் ஆகியோர் தங்களது வீடு, அலுவலகங்களை தருவதற்கு முன் வருவதாக பகிரங்கமாக அறிவித்து இருந்தனர்.

இதனால் விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி என்ன செய்யப்பகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற யோசித்து தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த்துடனும் ஆலோசித்து உள்ளார். இதற்கு அவரும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

ரஜினி இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.