Rajinikanth
நாளைய முதல்வர் ரஜினி தான் என உற்சாகத்துடன் இருந்து வந்த ரசிகர்களுக்கு ரஜினியின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajinikanth Press Meet Speech  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அனைவரும் ஆசை. அதுவும் கூடிய விரைவில் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவேன் ஆனால் ஆட்சி தலைவராக இருக்க மாட்டேன். கட்சி தலைவராக தான் இருப்பேன் என அறிவித்துள்ளார்.

ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு? இயக்குனர் யார் தெரியுமா? – இணையத்தில் வெளியான பரபரப்பு தகவல்கள்

அதாவது ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு மட்டும் தான் அவர் தலைவர், முதல்வர் வேட்பாளர் நிச்சயம் வேறொருவராக தான் இருப்பார். இந்த வழியை தான் நான் பின்பற்ற போகிறேன் என கூறியுள்ளார்.

ரஜினியை முதல்வராக்கி பார்க்க ஆசைப்பட்ட அவரது ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தான் கொடுத்துள்ளது.

எது எப்படியோ இப்போதைக்கு நீங்க அரசியலுக்கு வந்தா மட்டும் போதும் என்ற மனநிலைக்கு மாற முயற்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.