ட்ரிப்புக்கு சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்தை பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம் மலர் கொடுத்து வரவேற்றுள்ளது. அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் ரஜினிகாந்த் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “லால் சலாம்” திரைப்படத்திலும் தனக்கான படப்பிடிப்பு நடித்து முடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது கருப்பு நிற டி-ஷர்டில் சிறிய ட்ராவல் பேக்வுடன் ஜாலியாக ஒரு ட்ரிப் சென்றுள்ளார். அதன்படி, சென்னையில் இருந்து இலங்கை வழியாக மாலத்தீவுக்கு பயணத்தை தொடங்கிய ரஜினியை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மலர் கொடுத்து வரவேற்றுள்ளனர். மேலும் அந்நிறுவனம் அவர்களது சமூக வலைதள பக்கத்தில் அப்புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளனர். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.