சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில், ரசிகர்களுக்கு இரண்டு இனிய செய்திகள்..
தனது 73-வது வயதிலும் செம ஆக்டிவ்வாக அசத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அகவை நாளில், இரண்டு் அப்டேட்டுகள் வெளிவருகின்றன. அது குறித்துப் பார்ப்போம்..
ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்றாலே அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்படும்.
அவ்வகையில், இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு இரண்டு அப்டேட்டுகள் வரிசை கட்டி ரிலீஸ் ஆக உள்ளது. அதில் ஒன்று கூலி படத்தின் அப்டேட். மற்றொன்று நெல்சன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்.
மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இதில், பாலிவுட் நடிகர் அமீர்கானும் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
‘கூலி’ படத்தின் கதைக்கரு, தங்கக் கடத்தல் கும்பலை பற்றி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படம், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தில், ரஜினியின் பன்ஞ் டயலாக்காக “முடிச்சிடலாமா” என பேசுவது ரசிகர்களை நிச்சயம் கவரும்.