Rajini vs Prabhas
Rajini vs Prabhas

Rajini vs Prabhas – பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் இந்தியளவில் புகழடைந்தவர் பிரபாஸ். இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் உருவாகும் இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படம் ஜப்பானில் வெளியாகிறதாம். பாகுபலி படத்திற்கு ஜப்பானில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் மிகப்பெரிய செல்வாக்கை வைத்திருக்கும் இந்திய நடிகர் ரஜினி. இவரது மார்கெட்டை தற்போது பிரபாஸ் குறிவைத்துள்ளார்.

சாஹோ படமும் அங்கு ஹிட்டாகும் பட்சத்தில் பிரபாஸுக்கும் ஜப்பானில் ஒரு பெரிய மார்கெட் உருவாக வாய்ப்புள்ளது.