வாழ்த்துக் கூறிய பிரபாஸுக்கு ராஜமௌலி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு வைரல்.

தென்னிந்திய திரை உலகில் வியக்க வைக்கும் திரைப்படங்களை இயக்கி மாபெரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி, RRR போன்ற திரைப்படங்கள் உலக அளவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வாழ்த்து சொன்ன பிரபாஸ்.. நெகிழ்ச்சியடைந்த ராஜமவுலி!!… வெளியான பதிவுகள் வைரல்.!

இந்நிலையில் ராஜமௌலி RRR திரைப்படத்திற்காக நியூயார்க் பிலிம்ஸ் க்ரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதில் நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் சிறந்த இயக்குனராக ராஜமௌலி உலகத்தை ஆளப்போகிறார், விருதுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

வாழ்த்து சொன்ன பிரபாஸ்.. நெகிழ்ச்சியடைந்த ராஜமவுலி!!… வெளியான பதிவுகள் வைரல்.!

இதற்கு இயக்குனர் ராஜமவுலி நன்றி டார்லிங், என் சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பியதற்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் பதில் அளித்திருக்கிறார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.