ராஜா ராணி 2 சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று ராஜா ராணி 2. ஆரம்பத்தில் ஆலியா மானசா மற்றும் சித்து என இருவரும் சேர்ந்து நடிக்க தொடங்கிய இந்த சீரியலில் இருந்து ஆலியா விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார்.

திடீரென சீரியல் குழு அவரையும் இந்த சீரியலில் இருந்து நீக்கிய நிலையில் தற்போது ஆஷா கவுடா நாயகி நடித்து வருகிறார். அவர் நடிக்க தொடங்கி சில மாதங்களே ஆகும் நிலையில் இந்த சீரியல் இந்த வாரத்தோடு மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.

சிவகாமி செய்த கொலைக்காக சரவணன் பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு சென்றுள்ள நிலையில் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என்ற ட்விஸ்ட்டுடன் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளது.

இந்த நிலையில் ராஜா ராணி 2 சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.