இரண்டு பாமை தேடி எடுத்த போலீசுக்கு ஜோதி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா முதல் பாமை தேடி கண்டுபிடித்த பிறகு ஜோதியிடம் இருந்து சரவணன் இரண்டாவது பாம் எங்கே இருக்கிறது என்ற தகவலை பெறுகிறார்.

இரண்டு பாமை தேடி எடுத்த போலீசுக்கு ஜோதி கொடுத்த அதிர்ச்சி, நடந்தது என்ன? ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து திருமயிலை பஸ் ஸ்டாண்டில் ஒரு பேக்கில் இருப்பதாக போலீசிடம் சொல்ல அதை சந்தியாவுக்கு போலீஸ் தெரியப்படுத்த பிறகு சந்தியா சம்பவ இடத்திற்கு சென்று வெற்றிகரமாக இரண்டாவது பாமையும் செயலிழக்க செய்கிறார். அடுத்து சரவணன் மூன்றாவது பாம் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள ஜோதியிடம் பேச அவர் சொல்ல மறுக்கிறார். இப்படி முதுகுக்கு பின்னாடி குத்துறீங்களே நீங்க கோழை தான் என சரவணன் வெறுப்பேற்ற ஜோதி கோபத்தில் மூன்றாவது பாம் சென்னையில் உள்ள ஒரு பெரிய மாலில் இருப்பதாக சொல்கிறார்.

இரண்டு பாமை தேடி எடுத்த போலீசுக்கு ஜோதி கொடுத்த அதிர்ச்சி, நடந்தது என்ன? ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதுமட்டுமல்லாமல் மூன்றாவது பாம் 3 மணிக்கு பதிலாக 2.30 மணிக்கே வெடிக்கும் என ஜோதி அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் அதிர்ச்சியடைய போலீஸ் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கப் பிறகு இந்த விஷயத்தை சந்தியாவிடம் தெரியப்படுத்த சந்தியா மாலுக்கு சென்று தீவிர தேடுதலில் ஈடுபடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.