மொத்தமாக சிக்கி உள்ளான் ஆதி. சரவணன் வெளுத்து வாங்கியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி பெண்ணை பிடித்து இருக்கு என சொல்ல அந்த பெண் தனியாக பேச வேண்டும் என சொல்ல பிறகு இருவரும் ரூமுக்குள் சொல்ல ஜெசி இருப்பதை பார்த்து ஆதி அதிர்ச்சி அடைகிறான். இங்கே எதற்கு வந்த பிளாக்மெயில் பண்ண பாக்குறியா என கேட்க ஜெசி என் வயித்துல உன் குழந்தை வளருது என சொல்ல அதுக்கு எனக்கும் சம்பந்தமில்லை என ஆதி சொல்ல செருப்பால அடிப்பேன் என வாக்குவாதம் முற்றுகிறது.

மொத்தமாக சிக்கிய ஆதி.. வெளுத்து வாங்கிய சரவணன்.. சந்தியாவுக்கே காத்திருந்த ட்விஸ்ட் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு ஆதி நீ கர்ப்பமான விஷயத்தை முதலில் என்கிட்ட சொல்லி இருக்கணும் ஆனா நீ என்ன பண்ண உனக்கு எனக்கும் சாப்டர் க்ளோஸ். அபார்ட் பண்ணிட்டு வேலைய பாரு என சொல்லி கதவை திறக்க அனைவரும் வெளியே இருப்பது பார்த்து ஆதி அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு சரவணன் ஏற்கனவே பெண் வீட்டாரை சந்தித்து இப்படி ஒரு பிரச்சினை சென்று கொண்டிருப்பதை சொல்லி ஜெசியை அந்த இடத்திற்கு வரவைத்த விஷயம் தெரிகிறது.

இப்படியான நிலையில் வீட்டுக்கு வந்ததும் சரவணன் ஆதியை போட்டு வெளுக்கிறான். இந்த வீட்ல இருக்கேன் எல்லாரும் என்ன நினைச்ச முட்டா பசங்க எது சொன்னாலும் நம்பிடு வாங்கன்னு நெனச்சியா என திட்டுகிறார். அவருடைய அப்பா இனி நீ என் புள்ளன்னு என் கையும் சொல்லாத நான் உன் அப்பா என்று எங்கேயும் சொல்லிக்க மாட்டேன் என கூறுகிறார். சந்தியா இந்த பிரச்சனையை விடுங்க. ஜெஸ்ஸி பத்தி யோசிக்கலாம் என சொல்ல இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

மொத்தமாக சிக்கிய ஆதி.. வெளுத்து வாங்கிய சரவணன்.. சந்தியாவுக்கே காத்திருந்த ட்விஸ்ட் - ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் சரவணன் ஆதிக்கும் ஜெசிக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறுகிறான்.