Rain Update
Rain Update

சென்னை : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் முதல் வடக்கு உள் கர்நாடகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.