விரைவில் வெளியாக இருக்கும் தெலுங்கு பாடலான டிஸ்கோ டிஸ்கோ பாடலை குறித்து கவர்ச்சி உடையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராய் லட்சுமி. இவர் தமிழில் “கற்க கசடற” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவர் அனைவருக்கும் பரிச்சயமானது ஜெயம் ரவியின் “தாம் தூம்” திரைப்படம் தான். அதனைத் தொடர்ந்து லாரன்ஸின் காஞ்சனா, சுந்தர்.சியின் அரண்மனை, அஜித்தின் மங்காத்தா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தார்.

அதன்பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவரது நடிப்பில் “சிண்ட்ரெல்லா” என்னும் திரைப்படம் வெளியானது. எப்போதும் ராய் லட்சுமி தனது இணையதள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

அதேபோல் தற்போது தான் நடிகருக்கும் தெலுங்கு படத்தின் பாடலான “டிஸ்கோ டிஸ்கோ” பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.