Rahul Thatha Tears on Stage : Gorilla Audio Launch | Jiiva | Sathish | YogiBabu | Kollywood | Tamil Cinema | Latest Cinema News

Rahul Thatha Tears on Stage :

குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும்.

அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம்.

பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும்.

அஜித் மிருகம் போல மாறிவிட்டார் – பரபரப்பான கருத்தை சொன்ன முன்னணி இயக்குநர்!

கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது.

ராகுல் தாத்தா பேசியதாவது,.

“இந்தப்படத்துல நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். கொரில்லாட்ட அடி வாங்காத ஆட்களே கிடையாது. அற்புதமா படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். எனக்கு அற்புதமான கேரக்டர் கொடுத்திருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பின் ஆர்யா, சாயிஷா ஜோடி சேரும் புதிய படம் – புகைப்படங்களுடன்.!

எனக்கு என்ன தேவையோ அனைத்தையும் செய்து கொடுத்தார் தயாரிப்பாளர். இந்தப்படம் ஓகோன்னு ஓடணும். இந்தக்காலத்தில் கொரில்லாவை வைத்து படமெடுப்பது ரொம்ப கஷ்டம். நிறைய செலவு செய்திருக்கிறார்கள்.

படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஹிந்தி, தெலுங்கு, என ஒவ்வொன்றையும் வாங்கி கொண்டுப் போய்விட்டார்கள். இந்த இயக்குநர் டான் கிடையாது டானுக்கு எல்லாம் டான்.

சாம் சி எஸ் பிரம்மாதமாக வேலை செய்திருக்கிறார். இந்தப்படத்திற்குப் பின் இப்படக்குழு அனைவரும் வேறு லெவலுக்கு செல்வார்கள்” என்றார்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.