தளபதி விஜயின் வசனத்தை பேசி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார் ராதிகா, அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நாயகியாக வலம் வந்தவர் ராதிகா, அதன் பின்னர் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி கண்டு விட்டார்.
தற்போது சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கலர்ஸ் தமிழ் சேனலில் கோட்டீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியின் எபிசோட் ஒன்றில் ராதிகா விஜயின் அப்படியெல்லாம் சொல்ல கூடாது பாப்பா என்ற வசனத்தை பேசி அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது பாப்பா..!! ????????
விஜய்யின் வசனத்தை பேசி அரங்கத்தை அதிரவைத்த ராதிகா சரத்குமார் ????????#ColorsKodeeswari | திங்கள் – வெள்ளி இரவு 8 மணிக்கு உங்கள் கலர்ஸ் தமிழில்@actorvijay | @RealRadikaa | @ColorsTvTamil | #ThalapathyVijay
— Ramesh Bala (@rameshlaus) December 23, 2019