பிரபாஸிற்கு வெற்றியை தருமா ராதே ஷ்யாம்? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

Radhe Shyam Movie Review : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் தான் ராதே ஷ்யாம். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

கைரேகையை வைத்து துல்லியமாக அனைத்தையும் கணித்து கூறுபவர் பிரபாஸ். காலத்தைக் கணிக்கும் இவரது கணிப்பு ஒரு கட்டத்தில் பொய்த்துப் போக இதனால் அவரது காதலி பூஜா ஹெக்டே பெரிய பிரச்சனை வருகிறது. இதனையடுத்து பிரபாஸ் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம். அதாவது காதலுக்கும் பிரபாஸ் கணிப்பிற்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் இந்த திரைப்படம்.

படத்தை பற்றிய அலசல் :

பிரபாஸ், பூஜா ஹெக்டே உட்பட அனைவருமே திறமையான நடிப்பை கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளனர்.

பிரபாஸ் உட்பட அனைவருமே பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளனர்.

படத்தின் VFX, ஒளிப்பதிவு ஆகியவை நம்ம பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளன. மனோஜ் பரமஹம்சா காதல் காட்சிகளை அழகாக படமாக்கி இருக்கார்.

கப்பல் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சம், ஹாலிவுட் லெவல் என்று சொல்லலாம்.

ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் தமன் ஆகியோரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

சாதாரண கதையாக இருந்தாலும் அதை மிக பிரம்மாண்டமாக வியக்க வைக்கும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார்.

தம்ப்ஸ் அப் :

1. நடிகர், நடிகைகள் நடிப்பு

2. ஒளிப்பதிவு

3. இசை

4. VFX பணிகள்

5. கப்பல் காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

1. சிம்ப்ளான கதை

REVIEW OVERVIEW
ராதே ஷ்யாம் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
radhe-shyam-movie-reviewமொத்தத்தில் ராதே ஷ்யாம் கதை அளவில் ஓவர் பில்டப், காட்சி அளவில் பிரம்மாண்டம்.