PT Selvakumar request Edappadi Palanisamy
PT Selvakumar request Edappadi Palanisamy

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. சென்னையில் 150 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி மூட்டை மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது.

PT Selvakumar request Edappadi Palanisamy : தற்போது கேளம்பாக்கம் தினசரி கூலி தோட்ட தொழிலாளர்கள் 150 பேருக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது.. அரிசிகளை பெற்று மக்கள் நெகிழ்ச்சியோடு சென்றனர்.

250 அரசி மூட்டைகள் பர்மா அகதிகளுக்கு விஜய் பட தயாரிப்பாளர் உதவி – புகைப்படங்களுடன் இதோ.!

உதவி பெற்ற பெண் சாமுண்டீஸ்வரி பேசியதாவது :நாங்கள் இந்த காட்டினை விட்டு எங்கேயும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம் ..இந்த கஷ்டமான சூழலில் பிச்சை கூட எடுக்க முடியாத சூழலில் இருக்கிறோம். ஆனால் எங்களையும் நினைவில் வைத்து இந்த காட்டுக்குள் வந்து உதவி செய்த கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமாருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்

ஜோதிகா பிரச்சனையை விடுங்கள் !

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் பேசியதாவது :

இன்று தமிழகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்ன ஆக போகிறதோ என்று எல்லா மாணவர்களுக்கும் பயம் இருக்கிறது. சிறு தொழில் குறு தொழில் பிரச்சனை இருக்கிறது. நிறைய பேர் கடனாளி ஆகி கொண்டிருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மக்களுக்கே ஏக பட்ட பிரச்சனை இருக்கும் சூழலில் ஜோதிகாவை பற்றி பேசி திசை திருப்பவது அவசியமா? அவர்கள் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறார்கள். 20 ஆண்டு காலம் ஒழுக்கமான நடிகையாக நிரூபித்துள்ளார்கள்.

உண்மையிலே அவர்கள் தவறுதலாக பேச வேண்டிய ஒரு எண்ணம் கிடையாது ..ஒரு வேளை வார்த்தைகள் தவறி விட்டிருந்தால் பூத கண்ணாடி போட்டு ஆராய்ச்சி செய்து அவர்களை அசச்சுறுத்தும் எண்ணம் நமக்கு இருக்க கூடாது. ஆணும் பெண்ணும் சமம் என்று கூறினால் மட்டும் போதாது. இப்போது தான் பெண்கள் சுதந்திரமாக வெளியில் வந்து பேச ஆரம்பிக்கிறார்கள் அதற்குள் ஓட ஓட விரட்டியடித்து விட வேண்டாம். சகிப்பு தன்மை, மன்னிக்கும் தன்மையை நம் இளைஞர் சமுதாயத்திற்கு கற்று கொடுக்க வேண்டும் …

முதல்வருக்கு வேண்டுகோள்:

இந்த நேரத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் கணக்கில் காடு களனி புறம்போக்கு இடங்கள் இருக்கிறது. உடனடியாக இந்த நிலங்களை அவசரமாக கையகபடுத்தி சாகுபடி செய்ய விவசாய குத்தகைக்கு கொடுக்க வேண்டும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொருட்களை உடனடியாக உற்பத்தி செய்ய வேண்டும். முதலமைச்சர் அவர்களும் ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள் .விவசாய உற்பத்தி நன்றாக இருந்தால் தான் ஒரு நாடு நன்றாக இருக்கும். கொரோனா பிரச்சனை ஓய்ந்தாலும் கூட உணவு பிரச்சனை இருக்கும். நீராதாரத்தை மேம்படுத்தி, இலவச மின்சாரம் கொடுத்து வரி விலக்கு இல்லாமல் உதவ வேண்டும் இந்தியாவிலே தமிழகம் உற்பத்தியில் முதல் மாநிலமாக வர வேண்டும். தமிழகத்தில் பசுமை புரட்சி வர வேண்டும். ஏன் என்றால் பசி பட்டினியால் பொருளாதாரத்தில் மிக பெரிய பிரச்சனையை நம் நாடு சந்திக்க இருக்கிறது. நான் பொருளாதார துறையில் கோல்ட் மெடலிஸ்ட் என்பதால் இதை சொல்கிறேன். உடனடியாக காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க முதல்வர் அவர்களுக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் இதே கோரிக்கையை வைக்கிறேன் என்று கூறினார் இந்த நிகழ்வில் “மீண்டும்”. படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கதிர் உதவினார். கேளம்பாக்கம் சமூக சேவகர்கள் பன்னீர், வேந்தரசி கலந்து கொண்டனர்.