தர்பார் படம் பார்க்க செல்பவர்களுக்கு டபுள் ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார்.
உலகம் முழுவதும் இப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.இப்படத்துடன் சேர்த்து சைக்கோ ட்ரைலரும் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சைக்கோ.
சைக்கலாஜிக்கல் திரில்லர் படமான இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி பலரை நடுநடுங்க வைத்திருந்த நிலையில் நேற்று ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி இருந்தது.
தற்போது இந்த ட்ரைலர் தர்பார் படம் வெளியாகியுள்ள தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.