Pro Volleyball
Pro Volleyball

Pro Volleyball – புரோ வாலிபால் லீக் போட்டியின் துவக்க ஆட்டதில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் அணி 4-1 என்ற செட் கணக்கில் யு மும்பா வாலி அணியை வென்று உள்ளது.

லீகின் முதல் கட்ட ஆட்டங்கள் கொச்சி ராஜிவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கபட்டது. தொடக்க போட்டியில் கொச்சி மற்றும் மும்பா அணியும் மோதின.

இதில் முதல் 4 செட்டில் கொச்சி அணி 15-11, 15-13, 15-8 மற்றும் 15-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கடைசி மற்றும் இறுதி செட்டை 15-5 என்று மும்பா அணி வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று நடந்த இரண்டாம் போட்டியில் காலிக்கட் ஹீரோஸ் – சென்னை ஸ்பார்டன்ஸ் அணிகள் பலபரிசை செய்தனர்.

மோசஸ் தலைமையிலான சென்னை அணியில் ஒலிம்பிக் வீரர் ரஸ்லான்ஸ் சரோக்கின்ஸ் உள்ளார். காலிக்கட் ஹீரோஸ் அணி கேப்டன் ஜெரோம் வினித் தலைமையில் களமிறங்குகிறது.

இரு அணிகளும் பலம் கொண்ட அணிகள் என்பதால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.