நடிகை பிரியங்கா மோகன் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்திருக்கும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் எப்போதும் பலவித புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் பிரியங்கா மோகன் தற்போது லேட்டஸ்டாக எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.