பிரின்ஸ் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், வெளிநாட்டு நடிகை மரியா ரியான்ஷாப்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியா… சூப்பராக வெளியான பிரின்ஸ் செகண்ட் சிங்கிள் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.

மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை சுரேஷ் மற்றும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்ததை தொடர்ந்து தமன் இசையில் உருவாகி இருக்கும் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியா… சூப்பராக வெளியான பிரின்ஸ் செகண்ட் சிங்கிள் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.

அதன்படி இப்படத்தின் முதல் பாடலான பிம்பிளிக்கி பிலாபி என்ற பாடலின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது பாடலான ஜெஸ்ஸிகா என்னும் பாடல் இன்று மாலை 5:30 மணி அளவில் வெளியாக இருப்பதாக படக்குழு நேற்று அறிவுத்திறந்ததை தொடர்ந்து பல மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு இப்படத்தின் ஜெஸ்ஸிகா பாடல் மாலை 8:35 மணி அளவில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.

Prince – Jessica Lyric Video (Tamil)| Sivakarthikeyan | Thaman S | Anudeep K.V