Premier Badminton League
Premier Badminton League

Premier Badminton League – மும்பையில் சனிக்கிழமை தொடங்கிய 4-ஆவது ப்ரீமியர் பாட்மிண்டன் லீக்(பி‌பி‌எல்) போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஹைதராபாத் ஹன்‌டர்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.

கடந்த 3 பி‌பி‌எல் சீசன்களில் 8அணிகள் மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது நடைபெறும் நான்காவது சீசனில் புதிதாக புணே7 ஏசஸ் அணி சேர்க்கப்பட்டது.

17 நாடுகளைசேர்ந்த 90 வீர்ர்கள் இதில் பங்கேற்கின்றனர். இவர்களில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற 8பேர், உலகின் முதல்நிலையில் உள்ள 8பேரும் அடங்குவர்.

புணே,மும்பை,ஹைதராபாத்,ஆமதாபாதத்,பெங்களூரு உள்ளிட்ட 5 நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன.சனிக்கிழமை மும்பை பிரிவு ஆட்டங்கள் தொடங்கின.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்க்ஷயாசென் (ஹைதராபாத்),கால்ஜெளவும் (புணே)மோதினர்.

முதல் கேமை லக்க்ஷயா சென் 15-10 என வென்றாலும்,அடுத்த 2கேம்களை 15-12, 15-14 என கல்ஜெள வென்றார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் சிராக் ஷெட்டி-மத்தியா போ (புணே),கிம் சா ரேங் போ டின் மோதினர்.

இதில் 15-13 என முதல் கேமை புணே வென்றது. இரண்டாவது கேமை 15-10,15-13 என ஹைதராபாத் வென்றது.

இந்த வெற்றி மூலம் 5ஆட்டங்களில் ஹைதராபாத் ஹன்டர்ஸ் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. ‌