அமெரிக்காவில் வலிமை திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Pre Release Collection of Valimai in USA : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சிக்கான வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளுக்காக தற்போது வரை 42 ஆயிரம் டாலர் வசூல் ஆகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த வசூல் நிலவரம் இன்னும் கணிசமாக அதிகரிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.