Praveen Gandhi Blasted Thalapathy Vijay
Praveen Gandhi Blasted Thalapathy Vijay

விஜய் நினைச்சாலே அசிங்கமா இருக்கு எப்படி இப்படி செய்யலாம் என பிரபல இயக்குனர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Gandhi Blasted Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் பல உண்டு. தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார்.

ஆனால் இவர் வளர்ந்து வரும் சமயத்தில் பல தோல்விகளையும் கொடுத்துள்ளார். மேலும் கொக்கக் கோலா விளம்பரத்தில் நடித்து விட்டு கத்தி படத்தில் விவசாய பிரச்சனை குறித்து பேசியிருப்பார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது இதெல்லாம் அடங்கிவிட்ட நிலையில் இயக்குனர் பிரவீன் காந்தி இது பற்றி பேசியுள்ளார்.

எதுக்கு இந்த விளம்பரம்? விஜய் குடும்பத்தை விமர்சித்த மீரா மிதுன்

கொக்கோகோலாவால் எந்த பிரச்சனையும் இல்லை என விளம்பரத்தில் நடித்து விட்டு அதன் பிறகு அதற்கு எதிராக கத்தி படத்தில் வசனம் பேசுகிறார்.

இப்படிப்பட்ட விஜய்யை நினைத்தாலே அசிங்கமா இருக்கு என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரவீன் காந்தி. இவர் நாகர்ஜுனாவை வைத்து ராட்சகன் என்ற படத்தை இயக்கியிரந்தார்.

அதன் பின்னர் விஜய்யை இயக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் விஜய்யின் கால்ஷீட் கிடைக்கவில்லை. இதனை மனதில் வைத்தே பிரவீன் காந்தி இவ்வாறு பேசி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் பிரவீன் காந்தியை மோசமாக விமர்சித்தும் வருகின்றனர்.