விஜய் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்திருக்கும் பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் படக்குழு தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜயை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், “நடிகர் விஜய் இன்றைக்கு அடைந்திருக்கும் வளர்ச்சியையும், பக்குவத்தையும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 14 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தோம். அப்போது முன்னாடி இருந்ததை விட நடிகர் விஜய் தற்போது அழகாக மாறியிருக்கிறார். ஆனால் மரியாதை, அன்பு, நட்பு காட்டுதலில் அவர் தற்போது வரை மாறவே இல்லை”. என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.