தளபதி விஜயுடன் நடனமாட பூஜா ஹெக்டே தயாராகிவரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pooja Hegde Dance Rehearsal For Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக வடபழனியில் செட் அமைக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரதமர் மோடி, முதல்வர் யோகியுடன், இன்று ஆலோசனை..

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்காக பூஜா ஹெக்டே தீவிர பயிற்சி பெற்றுவரும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

English Title-லில் உருவான தளபதி Vijay-ன் 6 திரைப்படங்கள்.! | Birthday Special Update | Vijay 47 | HD

இந்த புகைப்படம் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.