பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் படக்குழுவினர் பெற்றிருக்கும் விருதுகள் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் தற்போது பல விருதுகளை வென்று இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

அதன்படி 2023 ஆண்டுக்கான ஜேஎஃப்டபல்யூ விருதுகளில், பொன்னியின் செல்வன் திரைப்படம் சிறந்த நடிகையாக திரிஷாவும், சிறந்த ஆடை வடிவமைப்பாளராக எலகான், சிறந்த பாடலாசிரியருக்காக கிருத்திகா நெல்சன், சிறந்த டப்பிங் கலைஞராக தீபாவெங்கட் (ஐஸ்வர்யா ராய் பச்சன்-நந்தினி), சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் தேர்வில் ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் விருதுகளை வென்று இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.