Pongal Race 2019 : பொங்கல் ரேஸில் பேட்ட விஸ்வாசம் படத்தை தொடர்ந்து மற்றொரு படமும் இணைந்துள்ளது. ஆனால் இந்த படம் வித்தியாசமாக வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலன்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கலில் நேரடியாக மோதி கொள்ள உள்ளன.

இந்த இரண்டு படங்களும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாக உள்ளன.

தற்போது இந்த படங்களுடன் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள சிகை படமும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகவில்லை. மாறாக ஜீ 5 இணையதளத்தில் வெளியாக உள்ளது. கதிரின் சிகை படமாக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.

இதன் டீஸர் ட்ரைலர்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருந்து வந்தது.

சமீப காலமாக கதிர் நடிப்பில் வெளியான மதயானைக்கூட்டம், கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் நல்ல வரவேற்பு இருந்தால் இந்த படத்தின் தயாரிப்பாளரும் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.

Sigai

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.