மது போதையில் தகராறு செய்த வழக்கில் டாடி ஆறுமுகத்தின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Police Case on Daddy Arumugam Son : டாடி ஆறுமுகம் யூடியூப்யில் மிகவும் பிரபலமானவர். இவரையும், இவரது சமையலையும் தெரியாவதர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

சிக்கன், மட்டன் என்ற விதவிதமான உணவுவகைகள் கிராமத்து பாரம்பரிய முறையில் செய்து அசத்தியும் வருகிறார். இவரது village Food factory எனும் சேனலை கிட்டத்தட்ட 4 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் ஒரு ஓட்டலில் மதுபோதையில் டாடி ஆறுமுகத்தின் மகன் , இவரது சித்தப்பா மகன் , நண்பர்கள் , உணவகத்தின் ஊழியர்களின் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் உணவகத்தின் பொருட்களை சேதப்படுத்தி, தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இது குறித்து உணவக ஊழியர் அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் கோபிநாத்துடன் மது அருந்தி ஊழியர்களுடன் தகராறில் ஈடுப்பட்ட இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்தை தேடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.