உடல் நலக்குறைவால் பிரபல நடிகர் மரணம் அடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

PM Modi Condolences to Aravindh Thuruvedi Death : சின்னத்திரையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் கடந்த 1987ம் ஆண்டு ஒளிபரப்பான மெகா தொடர் தான் ராமாயணம். இந்த தொடரில் ராவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அரவிந்த் திரிவேதி. இவருடைய நடிப்பு ரசிகர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்தது.

உடல்நலக்குறைவால் பிரபல நடிகர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

இந்த சீரியல் மட்டுமல்லாமல் பல்வேறு சீரியலிலும் படங்களிலும் நடித்தார். 82 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.