பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே போல் அச்சு அசலாக இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயினியாக அனைவருக்கும் பரிச்சயமானவர் தீபிகா படுகோனே. இவர் தற்போது ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே வெளியான ஷாருக்கானின் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளவர்.

தற்போது “ப்ராஜெக்ட் கே” என்று பல படங்களை புக் செய்து வரிசையாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா படுகோனை போல் அச்சு அசலாக இருக்கும் ரிஜுதா கோஷ் டெப் என்பவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் நீங்கள் பார்க்க தீபிகாவை போல் இருக்கிறீர்கள்!! எனவும் நீங்கள் தீபிகாவின் தங்கையா? மற்றொருவர் தீபிகாவின் 2.0 என்று தங்களது கேள்விகள் மற்றும் கருத்துக்களை அப்பெண்ணிடம் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அப்புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கியும் வருகின்றனர்.