பிசாசு 2 திரைப்படம் U/A சான்றிதழ் பெறும் முனைப்பில் உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது.

பிசாசு படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் தற்போது இயக்கியிருக்கும் படம் தான் “பிசாசு 2”. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால் வருத்தம் அடைந்த படக்குழு U/A சான்றிதழ் பெருமுனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக இருந்தா இப்படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.