Marana Mass

Petta Single Track : இது என்ன பேட்ட சிங்கிள் ட்ராக்கிற்கு தமிழ் ராக்கர்ஸால் வந்த சோதனை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் காலா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் நடித்துள்ளார்.

படையப்பா, பாஷா பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இப்படத்தின் மரண மாஸ் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணிக்கு யூ ட்யூபிலும் 5.30 மணிக்கு சன் நெஸ்ட் ஆப்பிலும் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் பைரஸி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் இப்பாடலை மாலை 4.37 மணிக்கே இணையத்தில் கசிய விட்டுள்ளனர்.

இது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டு விட்டதாக கூறியும் தற்போது பாடல் லீக்காகி இருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.