சன் டிவியில் புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் ஜீ தமிழ் சீரியல் நடிகர்.

Vijay Venkatesh New Serial in Sun Tv : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் பேரன்பு. மாமியார் மருமகளின் உறவை மிக அழகாக காட்டிய இந்த சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வந்தனர். 

இதில் ஹீரோவாக நடித்து வந்தவர் விஜய் வெங்கடேஷ். மேலும் நாயகியாக வைஷ்ணவி நடித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரன்பு சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது விஜய் வெங்கடேஷ் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிக்க உள்ளார். 

இந்த சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலம் அடைந்த சிப்பு சூரியன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெகுவிரைவில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.