Pei Mama Movie First Look
Pei Mama Movie First Look

வடிவேலு நடிக்க என்ற படத்தை தட்டி தூக்கி நடித்து முடித்துள்ளார் யோகி பாபு. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Pei Mama Movie First Look : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது வைகைப்புயல் வடிவேலு தான். இவருடைய ஒவ்வொரு சைகைகளும் இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் பலமாக இருந்து வருகிறது.

சமீப காலமாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வரும் வடிவேலு பேய் மாமா, இரண்டாம் புலிகேசி உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே டேக்கப் ஆகவில்லை.

இந்த நிலையில் தற்போது பேய் மாமா படத்தில் வடிவேலுக்கு பதில் யோகி பாபு நாயகனாக நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.

Yogi Babu Helps to FEFSI

தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்தி தெரியாது போடா என்ற டயலாக்கை வைத்து எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா என குறிப்பிடப்பட்டுள்ளது.

corona vaccine-வோட வருவோம் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ள பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோ அந்த போஸ்டர்