Yogi Babu

Pattipulam Yogi Babu : தன்னுடைய கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்ய இருந்த ரசிகர்களுக்கு யோகி பாபு அன்பு கட்டளையிட அதனை ரசிகர்களும் மனதார ஏற்று கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு தான். ரஜினி, கமலை தவிர பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

மேலும் இவர் தற்போது ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இன்று பட்டிபுலம் என்ற திரைப்படம் ரிலீசாகி உள்ளது.

இந்த படத்திற்காக யோகி பாபு ரசிகர்கள் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் அவரது கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் யோகி பாபு கொண்டாட்டம் என்ற பெயரில் உணவு பொருட்களை வீணாக்க வேண்டாம் என கேட்டதற்கு இணங்க ரோகினி தியேட்ட்ரில் அவரது கட் அவுட் டுக்கு நடை பெற இருந்த பாலாபிஷேகம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் யோகி பாபுவின் இந்த முடிவும் வேண்டுகோளும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.