Pathu Thala First Look Announcement

ஏ ஆர் ரகுமான் பத்துதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Pathu Thala First Look Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வேட்டையாடி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதுமட்டுமல்லாமல் ஜில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து 10 தல என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சிம்பு ரசிகர்களுக்கு ஏ.ஆர் ரகுமான் கொடுக்கும் ஸ்பெஷல் ட்ரீட் - பத்து தல படம் பற்றி வெளியான அறிவிப்பு.!!

திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.